×

திருத்தணி முருகன் கோயிலில் அறுபடை வீடு ஆன்மீக பயண குழுவினர் தரிசனம்

 

திருத்தணி, ஜன. 29: தமிழக அரசு சார்பில் ஆறுபடை முருகன் கோவில்களுக்கு, மூத்த குடிமகன்களை இலவசமாக ஆன்மீக சுற்றுப் பயணம் அழைத்து செல்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில், ஆயிரம் பேரை அழைத்து செல்வதற்கும் இந்து சமய அறநிலைய துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். முதற்கட்டமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய, மாவட்டங்களை சேர்ந்த 207 பக்தர்களை நேற்று சென்னை பாரிமுனையில் இருந்து 4 பேருந்துகளில் ஏற்றி வைத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்.

இந்நிலையில் நேற்று மதியம், அந்த பக்தர்கள் திருத்தணி, அருள்மிகு முருகன் மலைக் கோயிலுக்கு வருகை தந்தனர். அப்போது கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் ஆறுபடை வீடு பக்தர்களை வரவேற்றனர். பின் கோயிலில் சிறப்பு தரிசனம் முடிந்ததும், அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் அறுபடை வீடு ஆன்மீக பயண குழுவினர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Arupada Veedu ,Tiruthani Murugan Temple ,Tiruthani ,Tamil Nadu government ,Arupadai ,Murugan ,Hindu ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை